Monday, August 15, 2011

நினைத்துப் பார்!!!

நான் தமிழன். இங்கு பிறந்ததால், இம்மொழி பேசத்தெரிவதால்..
அதே போல் நான் இந்தியன், இங்கு பிறந்ததால், இங்கு வாழ்வதால்..
தமிழ்நாட்டில் தொழில் செய்யும் அகர்வாலும், ஷர்மாக்களும் என்னுடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள்? தமிழர்கள் என்ற முறையிலா, இந்தியன் என்ற உறவிலா...

கடல் கடந்த உறவிற்கு கொடிபிடிக்கும் நண்பா...
எத்தனை வல்லூறுகளும், நரிகளும் இத்தேசத்தை கூறு போட கூடி நிற்கின்றன என்று தெரியுமா..
சரி. மத உணர்வின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காதே என்று கோஷம் போட்டுவிட்டு, மொழி அடிப்படையில் பிரிப்பது சரியா? தான் நினைத்ததை அடுத்தவர் உணர உதவும் ஒரு கருவிதான் மொழி.

தவறு எங்கு நடந்தாலும் மனிதத்தோடு பார். உன்னுடைய மனிதத்தை நான் சந்தேகித்திருக்க மாட்டேன் இது போன்ற பதிவு பாகிஸ்தான் குண்டு வெடிப்பின் போது வந்திருந்தால்.. சோமாலியாவில் பட்டினியால் பல பேர் செத்தபோது வந்திருந்தால்.. சூடானின் உள்நாட்டு யுத்தத்தில் பலர் மாண்டபோது வந்திருந்தால்...இலங்கையின் கொலைகளத்தில் மாண்டவரை பார்க்கும் போது மட்டுமே உன் மனிதம் உயிர்த்தெழும் என்றால் அது மனிதம்தானா என்று சிந்தித்துப் பார்..உன் மனிதம் கூட மொழியால் மட்டுமே கிளர்ந்தெழுமா?

மொழியின், மதத்தின் அடிப்படையில் நம்மைப் பிரித்து அரசியல் செய்யும் வீணர்களிடம் இருந்து விலகி நில். இத்தேசம் இருந்தால்தான் நீ? அதை உணர்.

குறை யாரிடம் இல்லை? உன் தேசத்தில் குறை இருந்தால் அதை சரி செய்யும் வழி தேடு. தேசத்தைப் பழிப்பதும் தாயைப் பழிப்பதும் ஒன்று... ஜெய் ஹிந்த்!!