சமீபத்தில் ஒரு Blogஐ படிக்க நேர்ந்தது. அதன் படைப்பாளர் கடவுள் மறுப்பாளர் என்பது அந்த Blogஐ பார்த்தவுடன் தெரிந்தது. ஒரு பதிவில் அவர் எழுதியதன் சாரம் இது.
அவருடைய நண்பர் ஒருவர் அய்யராம். அவர் ஒரு நாள் மிகவும் வருத்தப்பட்டு கேட்டாராம் இந்த 21ஆம் நூற்றாண்டில் இணையத்தில் இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் (பார்ப்பனர்) இவ்வாறு தாக்கி எழுதலாமா என்று கேட்டாராம். Facebookல் கொடுக்கப்பட்ட இடத்தில் எல்லாவற்றையும் விளக்கமுடியாது என்பதால் அவர் தனது Blog இல் ஒரு Post போட்டாராம். மேலும், அவரிடம் இது குறித்து விவாதித்தால் அவர் எதுவும் தவறாக எண்ணுவாரோ என்பது கூடக் காரணமாம்.
இவராகவே சில பைத்தியகாரத்தனமான கேள்விகளை கேட்டுவிட்டு சொல்லும் பதில் "மீன் குட்டிக்கு நீந்தக்கற்று தரவேண்டுமா?" ஐயர்கள் "அவா" "இவா" என்று தங்களுக்கென்று சமஸ்க்ருதம் கலந்த தமிழில் பேசுகிறார்கள். எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தமிழையே பேசுகிறார்கள். திருநெல்வேலிக்காரன் எங்கிருந்தாலும் அவனுடைய வட்டார வழக்கிலே பேசுவான். மதுரைக்காரனும் அவ்வாறே.. அதற்காக அவர்களையும் இவ்வாறு எழுதுவாரோ? மேல் சட்டையை கழற்றினால் அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் வேற்றுமைத்தன்மையைத் தருகிறதாம்.
சரி என்று அவரின் பிதற்றலைப் தொடர்ந்து பார்ப்போம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு முடிவு செய்தேன். அதில் இவரின் சாதி வெறி பிடித்த உண்மை முகம் வெளிப்பட்டது.
"பார்ப்பனீய" என்பது ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்காதாம். சாதி மேலதிக்கதுக்குக் கொடி பிடிப்பவர் எல்லாரையும் குறிக்குமாம். எவர் மீதும் இவருக்கு துவேஷம் கிடையாதாம். எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணம் இவருக்கு கிடையாதாம். இது எப்படி?
மேலே சொன்ன எதுவும் இவர் ஐயரை குறையாய் எழுதியதாய் யாரும் கருதவேண்டாம். கடவுள் மறுப்பாளரான இவர் ஒரு இடத்தில் தன்னை ஹிந்து என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்.
இவர் போன்றவர்கள் துணிவிருந்தால் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் இரட்டை குவளை முறையை பின்பற்றுவோரை சாதிய அடிப்படையில் இழிவுபடுத்தட்டுமே அல்லது சாதி சொல்லி அழைக்கட்டுமே? இவர் நாக்கு அறுந்துவிடும். அந்தப் பயத்தில், "பார்ப்பனர்" என்பவர் சாதியை பின்பற்றுவோர் அனைவருமே என்று பிதற்றுகிறார். துணிவின்றி திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார். இவரது முயற்சிக்கு "பார்ப்பன தன்மை இல்லாத பார்ப்பனர்களும்" உதவவேண்டுமாம். இதிலிருந்து மிகத்தெளிவாக தெரிவது ஒன்றே. "பார்ப்பனர்" என்று இவர் எழுதுவது ஒரு சாதியையே குறித்தே என்பது திண்ணம்.
இவர் போன்றவர்கள் ஒருவித மனநோயாளிகள். சாதியே இல்லை என்று கூப்பாடு (போலி வேஷம்) போடும் இவர்கள் முதலில் இந்த மனோவியாதியிலிருந்து வெளியே வந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யட்டும். அவரது முறையிலேயே கூறுவதென்றால் "வெளித்தோலில் அல்லாமல், வியாதி தோலின் அடியில் ஒளிந்துள்ளது."
சரி, இந்த post எதற்காக? நிச்சயம் இவர்களுக்கு பதில் சொல்வதற்காக இல்லை. இவர்கள் தங்கள் சிந்தனையிலும், செயலிலும் எவ்வளவு முரண்பட்ட மனிதர்கள் என்பதை வெளிக்காட்டவே.